போலந்து மாணவரை வெளியேற்ற மத்திய அரசுக்கு தடை


போலந்து மாணவரை வெளியேற்ற மத்திய அரசுக்கு தடை
x
தினத்தந்தி 18 March 2020 8:27 PM GMT (Updated: 18 March 2020 8:27 PM GMT)

போலந்து மாணவரை வெளியேற்ற மத்திய அரசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

போலந்து நாட்டைச் சேர்ந்த கமில் சிய்ட்சின்ஸ்கி என்ற மாணவர், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படிக்க சேர்ந்துள்ளார். கடந்த மாதம் 14-ந்தேதி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரா க நடந்த போராட்டத்தில் கமில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் 14 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ், கடந்த மாதம் 24-ந்தேதி அவருக்கு கிடைத்தது. அவர் கடந்த 9-ந்தேதி, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருந்தார். இதற்கிடையே, அந்த நோட்டீசை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி கமில், கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி சப்யாசாச்சி பட்டாச்சார்யா, நேற்று நோட்டீசை ரத்து செய்தார். நோட்டீசை செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story