தேசிய செய்திகள்

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி + "||" + Supreme Court dismisses the curative petition of one of the convicts in the 2012 Delhi gang-rape and murder case, Pawan Gupta, against the dismissal of his review plea rejecting his juvenility claim.

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி,

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே,  குற்றவாளிகளில் ஒருவரான  பவன் குமார் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து பவன் குமார் தற்போது மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.  இந்த நிலையில், பவன் குமாரின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம்  இன்று தள்ளுபடி செய்துள்ளது.

குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை தூக்கிலிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
2. டாஸ்மாக் வழக்கு- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
தமிழக டாஸ்மாக் மதுக்கடை திறப்பு தொடர்பாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
3. டாஸ்மாக் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
4. ம.பியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு; சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
மத்தியபிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
5. சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு - 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை வரும் 4 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.