உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் - ராகுல்காந்தி


உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 7 April 2020 6:49 AM GMT (Updated: 7 April 2020 6:49 AM GMT)

உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம்" என்று  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியதாவது;- “ பழிக்குப் பழிவாங்குவது நட்பு அல்ல.  தற்போதைய தருணத்தில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும். ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு  கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி மறுத்தால் தகுந்த பதிலடி தருவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம். 


Next Story