ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,600-ஐ நெருங்கியது
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,600-ஐ நெருங்கி உள்ளது.
ஹைதராபாத்,
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,306 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 488 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,062 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் அதிக பட்சமாக கர்நூல் மாவட்டத்தில் 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குண்டூர் மாவட்டத்தில் 319 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 266 பேரும, நெல்லூரில் 91 பேரும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story