டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது


டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 5 May 2020 10:06 PM IST (Updated: 5 May 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,500-ஐ தாண்டியுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5104 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரொனா தொற்றுக்கு அங்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உள்ளது. 

Next Story