டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது


டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 18 May 2020 11:07 PM IST (Updated: 18 May 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.   நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக உள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 3,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 10,054 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 4,485 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்திய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மராட்டியம், குஜராத் மற்றும் தமிழகத்தை தொடர்ந்து டெல்லி நான்காம் இடத்தில் உள்ளது.

Next Story