எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றச்சாட்டு; இந்தியா நிராகரிப்பு


எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றச்சாட்டு; இந்தியா நிராகரிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 4:22 AM IST (Updated: 22 May 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

இந்திய சீன எல்லையில் இந்தியப் படைவீரர்கள் சீன பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியது.

புதுடெல்லி, 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக், சிக்கிம் பகுதியில் இந்தியப் படைவீரர்கள் அத்துமீறி சீன பகுதியில் நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியது.

இந்த குற்றசாட்டை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “அசல் கட்டுப்பாட்டு கோடுதான் இரு தரப்பு எல்லையாக இருந்து வருகிறது. இந்தியப்படையின் சாதாரண ரோந்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சீனத்தரப்புதான் ஈடுபட்டுள்ளது. இந்திய தரப்பில் எல்லை தாண்டி சென்றனர் என்று கூறுவது சரியானது அல்ல. எல்லையில் இந்தியத்தரப்பு கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்தியாவின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்” என்றும் கூறினார்.

Next Story