கொரோனா பாதிப்பு நடவடிக்கை: ஊரடங்கால் உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா பாதிப்பு நடவடிக்கையாக நடைபெறும் ஊரடங்கால் உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளி விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால், நிதி ஆயோக் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால் மற்றும் புள்ளிவிவர அமைச்சக செயலாளர் பிரவீன் வஸ்தவா ஆகியோர் நிருபர்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது, நோயை எதிர்த்து போராட சரியான நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஊரடங்கு நடவடிக்கையை எடுத்தது என்றும், ஊரடங்கு காரணமாக உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டது என்றும் கூறினார்கள். மேலும் இந்த ஊரடங்கு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
ஊரடங்கு காரணமாக 14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் வரை தொற்று பாதிப்பிலிருந்து தவிர்க்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதைப்போல 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் பேர் வரை உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story