தேசிய செய்திகள்

‘தனிமைப்படுத்த எங்கள் மாநிலம் வாருங்கள்’ - இமாசல் முதல்-மந்திரி அழைப்பு; காங்கிரஸ் எதிர்ப்பு + "||" + Come to our State to isolate: Himachal Cheif-Minister Call; Opposition to Congress

‘தனிமைப்படுத்த எங்கள் மாநிலம் வாருங்கள்’ - இமாசல் முதல்-மந்திரி அழைப்பு; காங்கிரஸ் எதிர்ப்பு

‘தனிமைப்படுத்த எங்கள் மாநிலம் வாருங்கள்’ - இமாசல் முதல்-மந்திரி அழைப்பு; காங்கிரஸ் எதிர்ப்பு
தனிமைப்படுத்த எங்கள் மாநிலம் வாருங்கள் என்று கூறிய, இமாசல் முதல்-மந்திரி அழைப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிம்லா, 

இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக இல்லை.

இந்த நிலையில் டி.வி.யில் தோன்றிப் பேசிய முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், கொரோனா வைரசுக்கு எதிராக தனிமைப்படுத்திக்கொள்வதற்கு இந்த தருணத்தில் ஏற்ற மாநிலம் தங்களது மாநிலம் என கூறி, மக்களை அங்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இது மாநிலத்தில் சுற்றுலா மேம்பட உதவும் என அவர் கருதி இந்த அழைப்பை விடுத்தார்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்-மந்திரியின் அழைப்பை சிம்லா ஓட்டல் மற்றும் உணவு விடுதிகள் சங்கமும் ஏற்கவில்லை. இது வழக்கமாக இமாசலபிரதேசம் சுற்றுலா வருபவர்களை தடுத்து நிறுத்தி விடும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய் சூத் குறிப்பிட்டார்.