கர்நாடகாவில் புதிதாக 1,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத் துறை தகவல்


கர்நாடகாவில் புதிதாக 1,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத் துறை தகவல்
x
தினத்தந்தி 1 July 2020 8:42 PM IST (Updated: 1 July 2020 8:42 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் புதிதாக 1,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தநிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 1,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,514 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,063 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.





Next Story