ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 நக்சல் பயங்கரவாதிகள் பலி


ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 நக்சல் பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 5 July 2020 2:31 PM IST (Updated: 5 July 2020 2:31 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள துமுடிமந்தா என்ற இடத்தில் காட்டுப் பகுதிகளில் நக்சல் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story