சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
‘லாக்-அப்’ மரணம், பாலியல் கொடுமை வழக்குகளில், சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ‘லாக்-அப்’ மரணம், சித்ரவதை, கைதிகள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற அத்துமீறல்கள் இந்தியாவில் வழக்கமான சம்பவங்களாகி உள்ளன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கோர்ட்டு மேற்பார்வையில் பிரத்யேகமாக ஒரு குழுவை அமைத்து தற்போது இந்தியாவில் ‘லாக்-அப்’ மரணங்கள், சித்ரவதை, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்ட விதிமுறைகள் குறித்து மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது தந்தை-மகன் இறந்தது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story