டெல்லியில் இன்று 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 July 2020 9:10 PM IST (Updated: 9 July 2020 9:10 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,051 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,258 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் டெல்லி முழுவதும் 4,027 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,226 ஆக அதிகரித்துள்ள நிலையில் 21,567 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story