தேசிய செய்திகள்

ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை + "||" + Rahul Gandhi should be made Congress president: MPs demand Sonia Gandhi

ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை

ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை
ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்கவேண்டும் என்று சோனியா காந்தியிடம் அக்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து உள்ளது.

மேலும் லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய-சீன படைகள் இடையேயான மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் விவகாரம், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசித்தார்

அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், கொரோனா பரவல் மற்றும் லடாக் எல்லை மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றியும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் பேசிய எம்.பி.க் கள், லடாக் மோதல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரை கூட்டுமாறு மத்திய அரசை வற்புறுத்தியதோடு, தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் பேசுகையில், ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி மக்கள் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்துவதோடு, அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது இந்த கோரிக்கையை ஆலோசனையில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர், கவரவ் கோகாய், ஆண்டோ அந்தோணி, குர்ஜீத் சிங் அவுஜிலா, சப்தகிரி சங்கர் உலாகா உள்ளிட்ட பெரும்பாலான எம்.பி.க்கள் வழிமொழிந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த கோரிக்கை குறித்து கூட்டத்தில் சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஆகஸ்டு மாதம் சோனியா காந்தியை இடைக்கால தலைவராக காங்கிரஸ் காரிய கமிட்டி நியமித்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை இப்போது மீண்டும் எழுந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகுல்காந்தி
விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
2. காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார். அவருக்கு வயது 71.
3. ஒரு பதற்றமான, அறிய முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி- முன்னாள்அதிபர் பாரக் ஒபாமா
ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.
4. பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு அல்ல ; ராஷ்டீரிய ஜனதா தளம்
பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு அல்ல, நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என ராஷ்டீரிய ஜனதா தளம் கூறி உள்ளது.
5. 70 இடங்களில் போட்டியிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் வாய்ப்பை பறித்ததா காங்கிரஸ்?
பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் வாய்ப்பை காங்கிரஸ் தட்டிப்பறித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.