தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு: மேலும் 87 பேர் பலி + "||" + Karnataka reported 2,496 new COVID-19 cases and 87 deaths in the last 24 hours State Health Department

கர்நாடகாவில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு: மேலும் 87 பேர் பலி

கர்நாடகாவில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு: மேலும் 87 பேர் பலி
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களளூரு,

கர்நாடகா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி விழிபிதுங்கி வருகிறது. மாநிலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 2,496 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,077 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 842 ஆக உயந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 1,142 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,390 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 25,839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,45,443 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக உயர்ந்துள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.