கர்நாடக மாநிலத்தில் இன்று 5,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 5,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகத்தில் இன்று 5,030 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,863 ஆக அதிகரித்துள்ளது.
இதில் பெங்களூருவில் மட்டும் அதிகபட்சமாக 2,207 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 97 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 2,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 29,310 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 49,931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 640 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Related Tags :
Next Story