கர்நாடக மாநிலத்தில் இன்று 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,942 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கர்நாடகாவில் 72 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததையடுத்து, இதுவரை கொரோனாவால் உயிரி்ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா சிகிச்சை முடிந்து 2,403 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,750 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 55,388 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story