உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு


உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 1 Aug 2020 7:28 PM GMT (Updated: 1 Aug 2020 7:28 PM GMT)

உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்தாலும், இறப்புவீதம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இது வென்டிலேட்டரில் வைக்கப்படுகிற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையே காட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்த 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் 0.22 சதவீத நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டரின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவை அதிகரித்ததால், கடந்த மார்ச் மாதம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகை வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தேவை குறைந்த நிலையில் வென்டிலேட்டர்களை இனி ஏற்றுமதி செய்யலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story