காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு


காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2020 9:30 PM GMT (Updated: 19 Aug 2020 8:58 PM GMT)

காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தளங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்களை திரும்ப அழைக்க உத்தரவிடப்பட்டது.

மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்படையினர் உள்பட சுமார் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வர உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story