புதிய கல்வி கொள்கை விவகாரம் - ஆசிரியர்கள் கருத்தை கேட்கும் மத்திய அரசு


புதிய கல்வி கொள்கை விவகாரம் - ஆசிரியர்கள் கருத்தை கேட்கும் மத்திய அரசு
x
தினத்தந்தி 23 Aug 2020 10:10 AM GMT (Updated: 23 Aug 2020 10:10 AM GMT)

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பள்ளி ஆசிரியர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கைக்கு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடுத்த ஆண்டே புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, நாளை முதல் வருகிற 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கருத்துருக்கள் பெறப்பட உள்ளன. நாடு முழுவதும் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் ஆய்வு செய்து என்சிஇஆர்டி உரிய முடிவை எடுக்கும் என அறிவிக்க வாய்ப்புள்ளது. 


Next Story