பீகாரில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் சட்ட சபை தேர்தலை எதிர்கொள்வோம்: பாஜக அறிவிப்பு
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் சட்ட சபை தேர்தலை எதிர்கொள்வோம் என்று பாஜக அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதத்தில் 20-ம் தேதிக்குள் பீகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிகிறது. ஆதலால், அதற்கு முன்பாக அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் முதல் பகுதியில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராம்விலாஸ் பாஸ்வானின் ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று அறிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story