இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 31 லட்சத்தைக் கடந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, 8 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால்பதித்து தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 61,408 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 06 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு 7 லட்சத்து 10 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 57,468 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 23 லட்சத்து 38 ஆயிரத்து 036 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் 836 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,542 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
நாட்டில் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. நேற்று 6,09,917 கொரோனா பரிசோதனைகள் நடந்தன. இதன்மூலம் இது வரையில் 3 கோடியே 59 லட்சத்து 02 ஆயிரத்து 137 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story