கேரளாவில் 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பறிமுதல்; அமலாக்க அதிரடி படை நடவடிக்கை
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அமலாக்க அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரத்தில் அட்டிங்கல் பகுதி அருகே 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை கடத்த முற்படும்பொழுது, கலால் துறையின் கீழ் செயல்படும் கேரள அமலாக்க அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி அமலாக்க துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பெங்களூருவில் போதை பொருட்கள் பயன்பாடு பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் அதிக அளவிலான போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது மற்றொரு பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story