நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு புதிய மனு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
நீட்’ தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவல் குறையும் வரை தேர்வை ஒத்திவைக்குமாறு அரசியல் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு கேசவ் மகேஸ்வரி என்பவர் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த புதிய மனுக்கள் இன்று (புதன்கிழமை) நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Related Tags :
Next Story