“கொரோனா ஒழிந்துவிட்டது” - மே.வங்க மாநில பா.ஜனதா தலைவர் அறிவிப்பு


“கொரோனா ஒழிந்துவிட்டது” - மே.வங்க மாநில பா.ஜனதா தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2020 3:52 PM IST (Updated: 11 Sept 2020 3:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஒழிந்துவிட்டதாக, மே.வங்க மாநில பா.ஜனதா தலைவர் அறிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,209- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 43 ஆயிரத்து 480-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 35 லட்சத்து 42 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனா ஒழிந்துவிட்டதாக, மே.வங்க மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். ஹூக்ளி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ், “கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது, கொரோனா வைரஸ் போய்விட்டது. ஆனால், பா.ஜனதாவின் வளர்ச்சியை மாநிலத்தில் தடுக்கும் நோக்கில், பேரணிகளை நடத்தவிடாமல் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார். இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பகுதி மக்கள் பா.ஜனதாவை நம்புகிறார்கள், 2019-ம்ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை முடித்துவிடலாம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் எண்ணினர். 2021-ம் ஆண்டு மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம்” என்று கூறினார்.

Next Story