தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ் குண்டுராவ் கவனிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தெலங்கானா பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஒடிசா மாநில பொறுப்பாளராக செல்லகுமார் எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட அந்தக் குழுவில் ஏ.கே.அந்தோனி, அகமத் படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story