மராட்டியத்தில் இன்று மேலும் 485 காவலர்களுக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 485 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை, புனே நகரங்களில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.
நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன்படி, மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காவலர்கள் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை 18,890 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,975 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 3,729 பேர் நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மராட்டிய போலீசார் 186 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story