தேசிய செய்திகள்

கேரள கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்; காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Urging Kerala Education Minister to resign; Congress volunteers protest

கேரள கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்; காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

கேரள கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்; காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் கல்வி மந்திரி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம்,

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.  
இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் பெயரும் அடிபட்டுள்ளது. இதனால் தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் கேரள உயர்கல்வி மந்திரி கே.டி.ஜலீலிடம், தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான மந்திரி ஜலீல் பதவி விலக கோரி தொடர்ந்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த அளவுக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கேரள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொச்சி நகரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு முன் இன்று ஒன்று திரண்டு, கேரள உயர்கல்வி மந்திரி கே.டி. ஜலீல் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர்.  எனினும், தொடர்ந்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விளாத்திகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை குமாரசாமி வலியுறுத்தல்
கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
3. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
4. சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
5. நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்; தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்
தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.