கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 17 Sept 2020 8:59 PM IST (Updated: 17 Sept 2020 8:59 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,94,356 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கர்நாடகாவில் 93 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,629 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 7,268 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,83,077 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது 1,03,631 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story