சிக்கிமில் 3 மந்திரி, 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா


சிக்கிமில் 3 மந்திரி, 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Sep 2020 1:06 AM GMT (Updated: 2020-09-20T06:36:11+05:30)

சிக்கிமில் 3 மந்திரி, 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்டக், 

சிக்கிம் மாநில சட்டசபை நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் கூடுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்-மந்திரி, மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை மந்திரி லோக்நாத் சர்மா, வனத்துறை மந்திரி கர்மா லோடே புட்டியா, மின்துறை மந்திரி மிங்மா நோர்பு செர்பா ஆகிய 3 மந்திரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல பாரதீய ஜனதாவை சேர்ந்த பர்வந்தி தமாங், டி.டி.புட்டியா ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிக்கிமில் கொரோனாவுக்கு இதுவரை 2 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டு 25 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story