பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கடத்த முயற்சி: எல்லை பாதுகாப்பு படை முறியடித்தது


பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கடத்த முயற்சி: எல்லை பாதுகாப்பு படை முறியடித்தது
x
தினத்தந்தி 20 Sep 2020 7:01 AM GMT (Updated: 20 Sep 2020 7:01 AM GMT)

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைபொருட்களை கடத்தும் முயற்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்தது.

ஸ்ரீநகர்,

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அத்துமீறி தாக்குதல் நடத்துவது மட்டும் இல்லாமல்  பயங்கரவாதிகள் ஊடுருவவும் உதவி செய்கிறது. எனினும், எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டு பாகிஸ்தானின் சதி செயல்களை முறியடித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தும் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. எல்லைப்பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆயுதங்கள் கடத்து முயற்சியை முறியடித்ததும் இரண்டு துப்பாக்கிகள், வெடிபொருட்கள்,  58 பாக்கெட்டுகள் போதைப்பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள், வெடிபொருட்கள், போதைபொருட்களை இந்தியாவுக்குள் அனுப்ப  ஒருவர் முயற்சித்துக் கொண்டிருந்ததாகவும்  எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இதைக் கவனித்து துப்பாக்கியால் சுட்டு எச்சரித்ததும் அந்த நபர் பாகிஸ்தான் பகுதியில் தப்பி ஓடிவிட்டதாகவும் எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story