இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்


இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 22 Sept 2020 10:59 AM IST (Updated: 22 Sept 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 1,053 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டி,  55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 44 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்து 935 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,01,468 பேர் குணமடைந்ததால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 6 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 779 ஆக அதிகரித்து உள்ளது. அந்தவகையில் நேற்று மட்டும் 9,33,185 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Next Story