இந்தியா-இலங்கை இடையே வரும் 26 ஆம் தேதி இருதரப்பு உச்சிமாநாடு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 ஆம் தேதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சே உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு முதன்முறையாக ராஜபட்சே இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் ராஜபட்சே இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story