குஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து


குஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து
x
தினத்தந்தி 24 Sep 2020 2:10 AM GMT (Updated: 2020-09-24T07:40:55+05:30)

குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ஓ.என்.ஜி.சி) ஆலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்டமாக வெளியான தகவல்களின்படி, ஆலையில் இருந்து பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையை சுற்றி சுமார் 4 கி.மீ பரப்பளவு வரை இந்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்து அதிகாலை 2:30 மணியளவில் தீயணைப்பு படையினர், ஆலைக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் உதவியோடு தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீயை முழுவதுமாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக உயரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story