ஹரியானாவுக்குள் டிராக்டரில் பேரணி சென்ற ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி


ஹரியானாவுக்குள் டிராக்டரில் பேரணி சென்ற ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி
x
தினத்தந்தி 6 Oct 2020 12:11 PM GMT (Updated: 6 Oct 2020 12:11 PM GMT)

ஹரியானாவுக்குள் டிராக்டரில் பேரணி சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

சண்டிகர், 

சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அது விவசாயிகளைப் பாதிக்கும் என்று கூறி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டரில் சென்ற ராகுல்காந்தி, முதல்மந்திரி அமரீந்தர் சிங் தடுத்து நிறுத்தப்பட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் டிராக்டரில் பேரணி சென்றபோது ஹரியானா எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், “ஹரியானாவுக்குள் பேரணியை அனுமதிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். 1 மணிநேரம், 5 மணிநேரம் என்ன 5,000 மணிநேரம் வரை காத்திருக்கவும் நான் தயார்” என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் ஹரியானாவுக்குள் 100 பேருடன் மட்டுமே ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்திக்கு அம்மாநில போலீசார் அனுமதி வழங்கினர்.  

Next Story