ஆந்திர பிரதேசத்தில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் இதுவரை 6,052 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 50,776 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 6,72,479 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 866 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.