கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,90,269 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பால் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,091 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 5,61,610 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 1,18,851 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் வருகிற மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.