ஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்; நபர் கைது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 கிலோ வெடிபொருட்களை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாகூர்,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகூர் நகரில் ஹிரன்பூர் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரெண்டு மணிலால் மண்டல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருப்பிடத்தில் 100 கிலோ எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த வெடிக்க கூடிய திறன் கொண்ட அம்மோனியம் நைட்ரேட் வகை வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று 400 எண்ணிக்கையிலான நியோ ஜெல் என்ற வேதிபொருள் அடங்கிய துண்டு பொருட்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அந்த நபரை கைது செய்து தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story