திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - வீதி உலா ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - வீதி உலா ரத்து
x
தினத்தந்தி 13 Oct 2020 6:39 AM GMT (Updated: 13 Oct 2020 6:39 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை கோவில் வளாகத்திற்குள் வைத்து நடத்த திட்டமிட்டிருப்பதாக முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதில் வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோர்சவம் நடைபெற்றது. கொரோனா தடுப்பு காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்மோற்சவம் நடைபெற்றது. அடுத்ததாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வீதி உலா நடத்தப்படும் என முதன்மை செயல் அலுவலர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முதன்மை செயல் அலுவலர் மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக வந்துள்ள முதன்மை செயல் அலுவலர் 4 மாட வீதிகளை ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி கோவில் வளாகத்திற்குள் வைத்து பிரம்மோற்சவத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Next Story