பத்து தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி: நிப்டி 291 புள்ளிகளை இழந்தது


பத்து தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி: நிப்டி 291 புள்ளிகளை இழந்தது
x
தினத்தந்தி 16 Oct 2020 2:30 AM IST (Updated: 16 Oct 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

பத்து தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. நிப்டி 291 புள்ளிகளை இழந்தது.

மும்பை, 

பத்து தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் வியாழக்கிழமை அன்று பங்கு வியாபாரம் படுத்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 291 புள்ளிகளை இழந்தது.

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையில் தொலைத்தொடர்பு துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.54 சதவீதம் இறங்கியது. அடுத்து வங்கித்துறை குறியீட்டு எண் 3.31 சதவீதம் குறைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 29 பங்குகளின் விலை சரிவடைந்தது. ஒரு நிறுவன பங்கு விலை மட்டும் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,066.33 புள்ளிகளை இழந்து 39,728.41 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,048.05 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 39,667.47 புள்ளிகளுக்கும் சென்றது.

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 290.70 புள்ளிகள் இறங்கி 11,680.35 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,025.45 புள்ளிகளுக் கும், குறைந்தபட்சமாக 11,661.30 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story