காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 5.15 மணி அளவில் அந்நாட்டு ராணுவத்தினர் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் பகுதியில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.
இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 18 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story