எல்லை தாண்டி வந்த சீன வீரரை ஒப்படைத்தது இந்திய ராணுவம்
லடாக் அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரரை, அந்நாட்டிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
லடாக்,
லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த பகுதியில் இந்தியா- சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். .
இந்தசூழலில் லடாக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள டெம்சாக் பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லை தாண்டி வந்தார். அவரை பிடித்து இந்திய வீரர்கள் நடத்திய விசாரணையில், அந்த சீன வீரரின் பெயர், வாங் யா லாங் என்பதும், அவர் தவறுதலாக இந்திய பகுதிக்குள் வந்ததாகவும் தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு, ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், உணவு, உடை போன்றவை இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்டன.
இந்நிலையில் எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை, சுசூல் மோல்டோ என்ற இடத்தில் அந்நாட்டிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
Related Tags :
Next Story