கர்நாடகாவில் இன்று 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,98,378 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் 2,251 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,873 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7,153 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,00,737 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகத்தில் 86,749 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story