தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி


தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 25 Oct 2020 11:44 PM IST (Updated: 25 Oct 2020 11:44 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் கனமழைக்கு வீடு இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் வனபார்த்தி பகுதியில் நரசிம்மையா என்பவரது வீட்டுக்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.  அவர்களில் 9 பேர் அவரது வீட்டிற்கு உள்ளேயும், ஒருவர் வீட்டுக்கு வெளியேயும் இரவில் படுத்து உறங்கியுள்ளனர்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்நிலையில், இன்று அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

இதில், 5 பேர் பலியானார்கள்.  4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 2 பேரை கிராமவாசிகள் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 More update

Next Story