மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி


மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 Oct 2020 7:46 PM IST (Updated: 28 Oct 2020 7:46 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி, 

கொரோனா தொற்றால் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிதின் கட்காரி, பிரகலாத் சிங் பட்டேல், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் செகாவத், அர்ஜூன் ராம்மேக்வால், ஸ்ரீபாத் நாயக், கைலாஷ் சவுத்திரி ஆகியோர் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டனர். மேலும் ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 

இதனிடையே சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை விரைவாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



Next Story