அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 29 Oct 2020 10:16 AM GMT (Updated: 29 Oct 2020 10:16 AM GMT)

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி, 

இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக, அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (டி.ஆர்.ஐ.பி) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்படி ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031-க்குள் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவு தானியங்களை சணல் பைகளில் மட்டுமே பேக்கிங் செய்து விநியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 

Next Story