ராஜஸ்தானில் இன்று 1,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ராஜஸ்தானில் இன்று 1,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 Oct 2020 2:49 PM GMT (Updated: 30 Oct 2020 2:49 PM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,95,213 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 15,251 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,78,064 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story