இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் இன்று துவக்கம்
இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் இன்று துவங்கியது.
சபர்மதி,
இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி, சபர்மதி ஆற்றங்கரையில் துவக்கி வைத்து, அதில் பயணம் செய்தார்.
இந்த விமான சேவையை தனியார் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது. முதல்கட்டமாக, ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாயில் உள்ள ஒற்றுமை சிலை வரை இந்த விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்திய விமான பயணத்தில் இது ஒரு புது சகாப்தம் ஆகும்,
ஒற்றுமை சிலை, ஆகமதாபாத் இடையே பயண நேரம் 4 மணியில் இருந்து 45 நிமிடங்களாக குறையும். ஒரு நாளைக்கு, இந்த விமானம் 8 முறை இயக்கப்படும். 14 பயணிகள் வரை சுமந்து செல்லும் வகையிலான பிரிவு 2பி வகை மிதவை விமானங்களில் ஒரு நபருக்கு ரூ.4,800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story