பாஜகவின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது- சிவசேனா பாய்ச்சல்
பாஜகவின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
மும்பை,
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில், பீகார் தேர்தலில் பாஜக வென்றால் மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. பாஜகவின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி, தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட மாட்டாது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இதுகுறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு கிளை அமைப்பு போல செயல்படுகிறது. எனவே அவர்களிடமிருந்து நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் சமயத்தில் பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்க்கின்றனர். அப்படியிருந்தாலும் தேர்தல் ஆணையம் வெளிப்படையானது என்று மக்கள் இன்னமும் நம்புகின்றனர்” என்றார்.
Related Tags :
Next Story