உத்தரபிரதேச சுகாதாரத்துறை தலைமைச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி
உத்தரபிரதேச சுகாதாரத்துறை தலைமைச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருப்பவர் அமித் மோகன் பிரசாத். இவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையை மூத்த டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவர்தான் கொரோனா பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை உத்தர பிரதேச மாநில ஊடகங்களுக்கு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story